முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மைக்குச் சவால் விடும் மனுக்களை விசாரிப்பதற்காக ஐவரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் செயற்படும் இந்த அமர்வில், நீதியரசர்களான…
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மைக்குச் சவால் விடும் மனுக்களை விசாரிப்பதற்காக ஐவரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் செயற்படும் இந்த அமர்வில், நீதியரசர்களான அச்சல வெங்காப்புலி, அர்ஜுன ஒபேயசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மனுக்கள் செப்டம்பர் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பிற தரப்பினர் உட்பட, முன்மொழியப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகப் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஓர் அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி ஆகக்கூடுதலான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறை தொடர்பான உத்தேச மாற்றங்கள் உட்பட 22ஆவது திருத்தச் சட்டமூலம் சட்ட மற்றும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்குக் கட்டுப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

