நீதிபதிகளின் ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் பரிசீலிப்ப…

நீதிபதிகளின் ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கும், சட்டநடைமுறைகள் தொடர்பில் சபாநாயகருக்கு விளக்கமளிப்பதற்கும் குறித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, அசல வெங்கப்புலி, சம்பத் அபேகோன், கிஹான் குலதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பான மனுக்களை பரிசீலித்து எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக அவர்கள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கவுள்ளனனர்.