முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அவ்வொன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவதுடன், சுயாதீன நீதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்…

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அவ்வொன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவதுடன், சுயாதீன நீதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

1_20260902_063113_024Download