அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று உயர் நீதிமன்றத்தில் விசா…

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

மனுதாரர் தரப்பின் வாதங்கள் நேற்று இரவு சுமார் 10.30 அளவில் நிறைவடைந்தன.

அதன்படி, மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் இன்று மீண்டும் தொடங்குகின்றது.

மேலும் இன்று இடைநிலை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் தரப்பின் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.