பிரேசிலைச் சேர்ந்த காதல் ஜோடியொன்று, "30 நொடிகளில் மிக அதிகமான முத்தங்களைப் பரிமாறிக்கொண்ட ஜோடி" என்ற புதிய கின்னஸ் உலக சாதனைக்குச் சொந்தக்காரர்களாகியுள்ளனர். ரெனாடோ ஆல்வ்ஸ் (Renato Alves) மற்றும் அவரது காதலி நயாரா ராபர்டா ரிபேரோ டி மரின்ஸ் (Naiara Roberta Ribeiro de Marins) ஆகி…

பிரேசிலைச் சேர்ந்த காதல் ஜோடியொன்று, "30 நொடிகளில் மிக அதிகமான முத்தங்களைப் பரிமாறிக்கொண்ட ஜோடி" என்ற புதிய கின்னஸ் உலக சாதனைக்குச் சொந்தக்காரர்களாகியுள்ளனர். ரெனாடோ ஆல்வ்ஸ் (Renato Alves) மற்றும் அவரது காதலி நயாரா ராபர்டா ரிபேரோ டி மரின்ஸ் (Naiara Roberta Ribeiro de Marins) ஆகிய இருவரும், வெறும் அரை நிமிடத்தில் 195 முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். சர்வதேச முத்த தினமான ஜூலை 6-ஆம் திகதி கொண்டாடப்பட்ட சில நாட்களிலேயே இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

இந்தச் சவாலை இணைந்து எதிர்கொள்ளத் தீர்மானித்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்த ஜோடி, தங்கள் இருவருக்குமிடையிலான வலுவான பிணைப்பும், தாங்களே "உலகின் சிறந்த ஜோடி" என்ற நம்பிக்கையுமே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டனர். இந்தச் சாதனை குறித்துப் பேசிய ரெனாடோ, இது வெறும் பட்டத்தை வெல்வதற்காக மட்டுமல்ல, நயாராவுடன் அந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் எனத் தெரிவித்தார். மேலும், இவர்களின் இந்த கூட்டு முயற்சியின் மூலம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தன் பெயருடன் நயாராவின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.