மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், 300 அலகுகளுக்கு (Units) மேல் திறன் கொண்ட மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நாளை (27) முதல் 29-ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, வலுசக்தி பிரதி அமைச்சர் இப்னு முஹம்மது அர்கம் பாராளுமன்றத்தில் வௌ்ளி…
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், 300 அலகுகளுக்கு (Units) மேல் திறன் கொண்ட மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நாளை (27) முதல் 29-ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, வலுசக்தி பிரதி அமைச்சர் இப்னு முஹம்மது அர்கம் பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (26) அன்று நுகர்வோரிடம் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதன் மூலம், கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்டதைப் போன்ற திடீர் மின் தடைச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்களுக்குத் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதே அரசின் பிரதான நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

