50 ஆவது தேசிய மகா விளையாட்டு விழா - 2026 இற்கு இணையாக நடைபெற்ற ஆண்களுக்கான விறுவிறுப்பான மிதிவண்டிப் போட்டியில் மேல் மாகாணத்தைப் (WP) பிரதிநிதித்துவப்படுத்திய இலக்கம் 187 உடைய எம். அவிஷ்க மெடோன்சா (M. Avishka Madonza) முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இளைஞர் விவகா…

50 ஆவது தேசிய மகா விளையாட்டு விழா - 2026 இற்கு இணையாக நடைபெற்ற ஆண்களுக்கான விறுவிறுப்பான மிதிவண்டிப் போட்டியில் மேல் மாகாணத்தைப் (WP) பிரதிநிதித்துவப்படுத்திய இலக்கம் 187 உடைய எம். அவிஷ்க மெடோன்சா (M. Avishka Madonza) முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்பாக ஆரம்பமான இப்போட்டியை, அவர் 3:56:26 மணித்தியாலங்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இப்போட்டியின் இரண்டாம் இடத்தை மேல் மாகாணத்தைச் சேர்ந்த இலக்கம் 188 உடைய பி.பி.பி.எம்.ஜி. சில்வா (P.P.P.M.G. Silva) பெற்றுக்கொண்டதுடன், வடமேல் மாகாணத்தைப் (NWP) பிரதிநிதித்துவப்படுத்திய இலக்கம் 141 உடைய எச்.எம்.எஸ். பிந்து (H.M.S. Pinthu) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இப்போட்டியின் இடைக்கால வேகப்பிரிவுகளில், மேல் மாகாணத்தின் நதீஷ ஈஷான் (Nadeesha Eshan) முதலாவது வேகப்பிரிவு வெற்றியாளராகவும் (First Sprint Winner), தென் மாகாணத்தின் டி.ஏ. சுரேஷ் தரங்க (D.A. Suresh Tharanga) இரண்டாவது வேகப்பிரிவு வெற்றியாளராகவும் (Second Sprint Winner) தெரிவு செய்யப்பட்டனர். வீரர்களின் ஒட்டுமொத்த சிறந்த திறமைகளின் அடிப்படையில், இம்முறை தேசிய மகா விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான மிதிவண்டிப் போட்டியின் குழு சாம்பியன்ஷிப் (Team Championship) பட்டத்தை மேல் மாகாணம் சுவீகரித்துக் கொண்டது.