இந்திய சினிமாவில் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஆமீர்கான் (Aamir Khan) 61 வயதில் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். திரைத்துறையில் தயாரிப்பு மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் 61 வயதான ஆமீர்கான், தனது நீண்ட நாள் காதலியான க…

இந்திய சினிமாவில் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஆமீர்கான் (Aamir Khan) 61 வயதில் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

திரைத்துறையில் தயாரிப்பு மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் 61 வயதான ஆமீர்கான், தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்ப்ராட் என்பவரை நேற்று (ஜூலை 5) மும்பையில் கரம்பிடித்தார்.

மும்பை பாந்த்ராவில் உள்ள ஆமீர்கானின் இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் முன்னாள் மனைவிகள்கௌரி ஸ்ப்ராட்டிற்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகன் முன்னிலையில் தம்பதிகள் இருவரும் திருமண ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆமீர்கானின் முந்தைய திருமண உறவுகள் முடிவுக்கு வந்திருந்தாலும், அவரது முன்னாள் மனைவிகள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த மார்ச் மாதம் தனது பிறந்தநாளன்று, கௌரி ஸ்ப்ராட்டுடன் தான் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் பார்ட்னர்களாக இருப்பதாகவும் ஆமீர்கான் அறிவித்திருந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்குள் அறிமுகம் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், கௌரியைத் திருமணம் செய்துகொள்ளப் போவதையும் அப்போதே உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆமீர்கான் இதற்கு முன்னதாக, 1986-ம் ஆண்டு ரீனா தத்தாவைத் திருமணம் செய்து 15 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் 2002-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு இயக்குநர் கிரண் ராவைத் திருமணம் செய்துகொண்ட அவர், 2021-ம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். தற்போது தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள ஆமீர்கானிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.