இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் குறித்துப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆன்லைன் வாடிக்கையாளர்களை இலக்…
இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் குறித்துப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆன்லைன் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. அஸ்பெஸ்டாஸ் தகடுகள், சிமெ்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு மோசடிக்காரர்கள் இணையத்தில் விளம்பரம் செய்கின்றனர்.வாடிக்கையாளர் பொருட்கள் வாங்கத் தொடர்புகொண்டதும், மோசடிக்காரர் வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள ஒரு உண்மையான ஹார்ட்வேர் கடைகயைத் தொடர்புகொண்டு, வாடிக்கையாளரின் வீட்டிற்கோ அல்லது கட்டுமான இடத்திற்கோ பொருட்களை வழங்குமாறு ஏற்பாடு செய்கிறார். பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன், வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், தான் வழங்கும் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக அனுப்புமாறு கூறுகிறார். பொருட்களை விநியோகித்த ஓட்டுநரோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரோ நேரில் பணத்தைக் கேட்கும் போதே, தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர் உணர்கிறார். இதனால் அனுப்பிய பணத்தையும், பொருட்களையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. பொருட்கள் உங்கள் இடத்தை வந்து அடைந்துவிட்டது என்பதற்காகவே அவசரப்பட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டாம். பொருட்களைக் கொண்டுவந்த ஓட்டுநரிடமோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரிடமோ நேரடியாகப் பேசி பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வங்கிப் பரிமாற்றம் செய்வதாக இருந்தால், குறிப்பிட்ட ஹார்ட்வேர் கடையின் பெயரில் உள்ள அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தை அனுப்ப வேண்டும். முடிந்தவரை பொருட்கள் கைக்கு வந்தவுடன் நேரில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுங்கள்.







-559047_850x460.jpg)




