2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் சாதகமான போ…

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21.08.2026) உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.நாட்டிற்கு கிடைத்துள்ள பணம்அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களை பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது.வெளிநாட்டு கடன்  2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening