மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். சந்தேக நபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் பல்வேறு சலுகைக…
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஷிரான் பாசிகிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களுக்கமைய, அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.தேர்தல் பிரச்சார நடவடிக்கைமுன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர், அமைச்சர்கள் இருவர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசாரணைகளில் சிக்கியுள்ள 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஷிரான் பாசிக்கினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட ஒருவர் ஷிரான் பாசிக்கிற்கு அனுமதியின்றி காணிகளில் பலமாடி தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக குறித்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது. ஷிரான் பாசிக் நீண்டகாலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக பாரிய அளவில் பணம் செலவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.












