ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் அவர்களுக்குப் போலிக் கடவுச்சீட்டுகளைத் தயாரித்துக் கொடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள்…

ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் அவர்களுக்குப் போலிக் கடவுச்சீட்டுகளைத் தயாரித்துக் கொடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகம் திட்டமிட்டபடி பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் ராணுவப் புலனாய்வுத் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் வர்த்தகக் குற்றவாளிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்த கசிந்த குரல் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பல முக்கிய நபர்கள் அரசுச் சாட்சிகளாக மாறத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்பு மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...