இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஹர்தோய் மாவட்டம், பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த ஷாமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்து…
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஹர்தோய் மாவட்டம், பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த ஷாமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணை
கடந்த 20ஆம் திகதி பரீட்சைக்காக பாடசாலைக்கு சென்றிருந்த மாணவிக்கும் அவரது வகுப்புத் தோழிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மாணவி வகுப்பு ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். எனினும், மாணவியிடம் உரிய காரணங்களை கேட்டறியாமல் ஆசிரியர் அவரை கடுமையாக தாக்கியதாக மாணவியின் தந்தை பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி, பரூக்காபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலை அதிபர் அக்ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் மாணவியின் வகுப்புத் தோழி ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

