பொம்மை திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஜெர்மன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்திற்கு உலகம…

பொம்மை திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஜெர்மன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள “பொம்மை” திரைப்படம், ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், “பொம்மை” திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை 0160 93857408 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துக் கொள்வதுடன், ஒன்லைன் வாயிலாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் திரைப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என்ற நோக்கில், “பொம்மை” திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.