ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை. தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாம் மூன்றாம் நிலை உறுப்பினர்கள் இணைந்து புத…
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை. தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாம் மூன்றாம் நிலை உறுப்பினர்கள் இணைந்து புதிய தலைவரைத் தேட திட்டமிடப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக கடந்த வருடத்தில் இருந்தே பேசப்பட்டது.அதனை தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டாம் நிலை உறுப்பினர்களின் இணைப்புதலைவர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது இரண்டாம் நிலை உறுப்பினர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது.யார் யாரைச் சந்தித்தாலும் இறுதியில் கிடைத்த விடை எதுவும் இல்லை என்பதுதான் அரசியல் மேடையில் பேசப்பட்ட விடயமாகும். இருப்பினும் இரு கட்சிகளும் இணைந்தால் யார் தலைவர் என்பது தொடர்பான பிரச்சினை ஒன்று இருப்பதாக ஒரு தரப்பும் கூறுகிறது. இந்த இரு தலைவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சிரேஷ்டர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் இந்த இணைப்பை சீர்குலைப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது. எனவே யார் தடை போட்டாலும் இப்போது இதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன இந்த இரு கட்சிகளினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் 'தலைவர்கள் விரும்புவதைச் செய்யட்டும் நாங்கள் இணைகிறோம்' என்று தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர்கள் கூறுவது போல் 'நாம் இணையாவிட்டால் முன்னோக்கி செல்வதற்கு வேறு வழியில்லை என்பதோடு பலமான ஒரு அணியை உருவாக்க முடியாது. இது யாருக்கும் புரிவதில்லை. இந்தப் புரியாத விடயத்தைப் புரியவைக்க குறைந்தபட்சம் நாமாவது இணைந்து இந்த இணைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று இரண்டாம் - மூன்றாம் நிலை உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இதன் மூலம் எப்படியாவது தலைவர்களுக்குச் செய்தியை அனுப்ப ஆயத்தமாகிறார்கள். 'தலைவர்கள் இணையாவிட்டாலும் சிரேஷ்ட தலைவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தடைபோட்டாலும் நாமாவது இணைகிறோம்' என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் 'தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தால்இ அதை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். நமது இரண்டாம் நிலையிலிருந்தோ அல்லது மூன்றாம் நிலையிலிருந்தோ ஒரு தலைவரைக் கண்டபிடிக்க முடியாதா என்ன? தலைவரைப் பின்னர் கண்டபிடித்துக் கொள்ளலாம் முதலில் இந்த இணைப்பை உருவாக்கி நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10











