(நமது நிருபர்) ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் 185 வாக்குகளில் 144 வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களிலும் இலங்கை அதிக வாக்குகளைப் பெற்…
(நமது நிருபர்) ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் 185 வாக்குகளில் 144 வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களிலும் இலங்கை அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் இலங்கையின் அர்ப்பணிப்பு மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலிக்கிறது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

