இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளை குறைத்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன. இதன்படி, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்ப…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளை குறைத்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன.

இதன்படி, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலைகளை முறையே 15 மற்றும் 20 ரூபாவால் குறைத்துள்ளது.

இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 399 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் 475 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.