சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வா…
சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள். ஐபோன் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..
gunal அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது.. ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.












