ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர…
ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், "ஐரோப்பாவிற்கு மலிவான மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிக விரைவில் தேவைப்படுகிறது சொல்லப்போனால், அது இன்றே தேவை" என்று வலியுறுத்தினார்.வான் பாதுகாப்பு மேலும், இந்த நேட்டோ உச்சிமாநாட்டின் மூலம் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் இது குறித்து நாளை(8.7.2026) டொனால்ட் ட்ரம்ப்புடன் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

