வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்ப…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள குறித்த வியாபாரியின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 40 வயதுடைய ஒருவரை 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.