கடந்த ஜூன் 23-ஆம் திகதிக்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை திங்கட்கிழமை (06) அன்று 340 ரூபாய் மட்டத்திற்குக் கீழ் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 339.88 ரூபாவாகக் குறைந்துள்ளது. அதேபோன்று, ஒரு அமெரிக…
கடந்த ஜூன் 23-ஆம் திகதிக்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை திங்கட்கிழமை (06) அன்று 340 ரூபாய் மட்டத்திற்குக் கீழ் குறைவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 339.88 ரூபாவாகக் குறைந்துள்ளது. அதேபோன்று, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 330.39 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், 2026 ஜூலை 03-ஆம் திகதியுடன் முடிவடைந்த இந்த வருடத்தின் காலப்பகுதியில், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 7.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2026 ஜூன் மாதம் முழுவதும் இலங்கை ரூபாய் மீது காணப்பட்ட அந்நிய செலாவணி அழுத்தம், தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

