அமெரிக்காவின் 2027 நிதியாண்டுக்கான எச்-1பி (H-1B) வேலைவாய்ப்பு விசா ஒதுக்கீடு முழுமையாக நிரம்பியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளன. அடுத்த நிதியாண்டில் புதிதாக 85,000 பேருக்கு மட்டுமே எச்-1பி விசா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந…
அமெரிக்காவின் 2027 நிதியாண்டுக்கான எச்-1பி (H-1B) வேலைவாய்ப்பு விசா ஒதுக்கீடு முழுமையாக நிரம்பியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளன.
அடுத்த நிதியாண்டில் புதிதாக 85,000 பேருக்கு மட்டுமே எச்-1பி விசா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரம்பு தற்போது எட்டப்பட்டுள்ளதால், புதிய விண்ணப்பங்கள் இனி ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கமான குலுக்கல் முறைக்குப் பதிலாக, விண்ணப்பதாரர்களின் ஊதிய நிலை மற்றும் கல்வித் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
மேலும், கடந்த நிதியாண்டில் 3,43,981 விண்ணப்பங்கள் பதிவான நிலையில், இந்த ஆண்டு அது 2,11,600 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.5 சதவீத வீழ்ச்சியாகும்.

