அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வீதிகளில் இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழப்பு அப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 200-க்கும் மேற்பட்ட பேரிடர் நி…

அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிகளில் இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழப்பு

அப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 200-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடரால் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 125 சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், மழை தொடர்ந்தால், ஆறுகளில் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயரும் என்று அந்த நாட்டின் வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.[IY3Z2HA]