அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்ட நிகழ்வுகள் வொஷிங்டனில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக நடைபெற்ற பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்…
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்ட நிகழ்வுகள் வொஷிங்டனில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக நடைபெற்ற பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக விழாவை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள தேசியப் பூங்காவில் 16 நாட்கள் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு விழாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், “நாம் நமது 250ஆவது சுதந்திர ஆண்டின் விளிம்பில் நிற்கிறோம். அமெரிக்கா மீண்டும் கம்பீரமாக எழுச்சி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார். விழாவின் தொடக்க நிகழ்வில் அமெரிக்கப் போர் விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகள், இராணுவ இசைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பிரபல நாட்டுப்புறப் பாடகர் லீ கிரீன்வுட்டின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்தது. The post அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பம்! appeared first on Battinaatham.

