சர்ச்சைக்குரிய பின்னணிகளுக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்க நட்சத்திர வீரர் பொலோரியன் பலோகன்னின் சிவப்பு அட்டைக்கான போட்டித் தடையை…

சர்ச்சைக்குரிய பின்னணிகளுக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க நட்சத்திர வீரர் பொலோரியன் பலோகன்னின் சிவப்பு அட்டைக்கான போட்டித் தடையை சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் தற்காலிகமாக நீக்கிய விவகாரம், போட்டிக்கு முன்பாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்ட போதிலும், மைதானத்தில் பலோகனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

போட்டியின் முக்கிய கோல்கள் மற்றும் திருப்புமுனைகள்

கெட்டிலாவாவின் இரட்டை வேட்டு: போட்டி தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே அமெரிக்காவின் பலவீனமான தடுப்பாட்டத்தைப் பயன்படுத்தி பெல்ஜியத்தின் சார்லஸ் டி முதல் கோலை அடித்தார். மின்னல் வேக பதிலடி: 31ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் மலிக் டில்மன் அடித்த பிறீ கிக், பெல்ஜியம் வீரர் ஹன்ஸ் வனகனின் தலையில் பட்டு திசைமாறி கோலாக மாறியது (1-1). ஆனால், அடுத்த ஒரே நிமிடத்தில் டி கெட்டிலாவா தனது அசாத்திய தலையால் முட்டிய கோல் மூலம் பெல்ஜியத்தை மீண்டும் 2-1 என முன்னிலை பெறச் செய்தார். கோல் காப்பாளரின் இமாலய தவறு: இரண்டாம் பாதியில் அமெரிக்கா நிதானமாக விளையாடிய போது, 57ஆவது நிமிடத்தில் அமெரிக்க கோல் காப்பாளர் மட் பிறீஸ் பந்தை நகர்த்த தாமதித்து மிகப்பெரிய தவறிழைத்தார். இதைச் சாதகமாக்கிய பெல்ஜியத்தின் மாற்று வீரர் வனகென் வெற்றிடமாக இருந்த கோல் கம்பத்துக்குள் பந்தை எளிதாக உதைத்து 3-1 என ஆட்டத்தை மாற்றினார். லுகாகுவின் முத்திரை: போட்டியின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரராக வந்த நட்சத்திர முன்களவீரர் றொமேலு லுகாகு பெல்ஜியத்தின் 4ஆவது கோலை அடித்து அமெரிக்காவின் கதையை முழுமையாக முடித்து வைத்தார்.

அடுத்த சுற்று சவால்:

கடந்த நான்கு உலகக்கோப்பை தொடர்களில் மூன்றாவது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பெல்ஜியம் அணி, அடுத்ததாக ஐரோப்பிய சம்பியனான பலம் வாய்ந்த ஸ்பெய்ன் அணியை எதிர்கொள்ளவுள்ளது.