அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் பற்றிய தகவல்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் சென்றிருந்த வேளையில் கூடுதலாக வெள…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் பற்றிய தகவல்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் சென்றிருந்த வேளையில் கூடுதலாக வெளிவந்திருந்தது. அங்கு ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்புத் தூதுவராக ஜனாதிபதி அநுரவுடன் கோர் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அந்தச் சந்திப்பின் போது, எந்நேரத்திலும் ஜனாதிபதி ட்ரம்பை நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான வசதியைத் தன்னால் ஏற்படுத்தித் தர முடியும் என்று கோர் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்தார்.