அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக விநியோகிக்கப்படவுள்ளன.பாதுகாப்பு நடவடிக்கைகள் ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.











