தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (29) மாலை மரப்பொந…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (29) மாலை மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.தேடுதல் நடவடிக்கை வழமை போன்று கண்காணிப்புக்கு சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஸ்னைப்பர் துப்பாக்கி - 01 ஒரு தொலைநோக்கி - 01 ரவைக்கூடு - 01 தோட்டாக்கள்- 07 உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குவதுடன் தற்போது தமன பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக குறித்த ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

