ஜூன் மாத இறுதியில் மொத்த அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு $6,450 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.செ…

ஜூன் மாத இறுதியில் மொத்த அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு $6,450 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.செலாவணிக் கையிருப்பு  மேலும் ஊக அடிப்படையிலான வணிகக் கோரிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி நிகர அடிப்படையில் அந்நிய செலாவணிக் கையிருப்பை சந்தையில் விற்றது. அதே நேரம், ஜூன் மாதத்தில் மத்திய வங்கி சந்தையிலிருந்து நிகர அடிப்படையில் $70.5 மில்லியனை கொள்வனவு செய்திருந்தது.

முந்தைய மாதத்தில் பெறப்பட்ட IMF கடனில் கணிசமான பகுதியை அரசாங்கம் செலவழித்ததே, கடந்த மாதத்தில் அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைந்ததற்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.