நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில் அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு க…
நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில் அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லைஅவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே தவிர, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல.அத்துடன் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பாருங்கள்.சர்வாதிகார செயற்பாடு அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள் கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால் அதனைத் தோற்கடிப்பார்கள்.ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார்“ என குறிப்பிட்டுள்ளார்.












