இலங்கைக்கு உன்னதமான பௌத்த தர்மம் கிடைத்த பெருமைக்குரிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மக்கள் தற்போதிருந்தே வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.தேசிய பொசன் உற்சவத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் தந்திரிமலை ரஜமகா விகாரை…

இலங்கைக்கு உன்னதமான பௌத்த தர்மம் கிடைத்த பெருமைக்குரிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மக்கள் தற்போதிருந்தே வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.தேசிய பொசன் உற்சவத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் தந்திரிமலை ரஜமகா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.இம்முறை பொசன் உற்சவம் நீண்ட வார இறுதி விடுமுறையில் அமைந்துள்ளதால், பெருமளவிலான பக்தர்கள் தற்போதிருந்தே அநுராதபுரம் புனித நகரத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு வருகை தரும் பொதுமக்கள், புனித நகரிலுள்ள மரச்செடிகள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்குமாறும், குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறும் அட்டமஸ்தானத்தின் பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல்வெடுனுவெவே ஞானதிலக்க தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.