தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்ஷண நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாயப்புகள் இல்லை…
தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்ஷண நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாயப்புகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நீதி அரசர்களின் ஓய்வூதிய விவகாரம் குறித்து நாமல் ராஜபக்ச கொழும்பில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், “ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதே அரசின் நோக்கமாகும். அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக நீதி அரசர்களின் பதவி காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு கிடையாது“ என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, அநுரவிற்கு வசதிகளை செய்து கொடுக்கச் சென்று எங்களுக்கு அழுது புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவன்சவின் சகோதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இனிவரும் காலங்களில் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் எல்லாம் நீண்டகால குத்தகைக்கு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..


-558033_850x460.jpg)






-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558066_850x460.jpg)