'ஜே.வி.பி-யுடன் ஒப்பந்தம் செய்து, 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி' உருவாக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவு, 2024 ஆம் ஆண்டில் ஜே.வி.பி பெற்ற வெற்றியைப் போன்றதொரு அரசியல் சுனாமியாக இருந்தது. இதன் பின்னரே நிலைமை தலைகீழானது. கம்பஹா மாவட்டத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் இளவரசராகக்…
'ஜே.வி.பி-யுடன் ஒப்பந்தம் செய்து, 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி' உருவாக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவு, 2024 ஆம் ஆண்டில் ஜே.வி.பி பெற்ற வெற்றியைப் போன்றதொரு அரசியல் சுனாமியாக இருந்தது. இதன் பின்னரே நிலைமை தலைகீழானது. கம்பஹா மாவட்டத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் இளவரசராகக் கருதப்பட்ட அநுர பண்டாரநாயக்க, விருப்பு வாக்குப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். முதலிடத்திற்கு ஜே.வி.பி-யின் விஜித ஹேரத் தெரிவானார். ஏனைய மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூண்கள் என வர்ணிக்கப்பட்ட பல தலைவர்கள் தோற்கடிக்கப்பட, ஜே.வி.பி 41 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த முடிவு சந்திரிகாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுதந்திரக் கட்சியையுமே உலுக்கியது'

