நாட்டில் பாரியளவிலான இலஞ்சம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உயர் அரச பதவிகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் கோடிக…
நாட்டில் பாரியளவிலான இலஞ்சம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசியல்வாதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உயர் அரச பதவிகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலஞ்ச வழக்குகள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஊழல் மற்றும் மோசடிகள்
"அரசியல்வாதிகள் உட்பட சில குழுக்களால் பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடிகள் செய்யப்படுவதாக சமூக மட்டத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும், தனிநபர்கள் அது குறித்து முறைப்பாடு செய்ய பயப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்துபவர்கள் மற்றும் சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாக்க ஆணையகம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று ஆணையகத்தின் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் சாட்சி ஒருவர் இருந்தால், அவர் நாட்டிற்கு திரும்பும்போது தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

