நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NSACP) தெரிவித்துள்ளது.இந்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவாகி…
நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NSACP) தெரிவித்துள்ளது.இந்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவாகியுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் இந்த தரவு அறிக்கைகளின்படி, (2920) நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், (2284) நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், (1289) நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும், (692) நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் (2847) நோயாளிகள் பிற பாலியல் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு முதல் (874) எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.மருத்துவ பரிசோதனைஇதேவேளை, தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க முடியும் என்று இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.
இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

