நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது…

நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.ஆனால், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன் கூறினார். எனவே, அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,