பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தி…

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் தீர்மானம் அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.