‘அஸ்வெசும்’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களுக்கு 9,357,346,250 ரூபாய் இன்று வங…
‘அஸ்வெசும்’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களுக்கு 9,357,346,250 ரூபாய் இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், 211,647 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,468,250,000 ரூபாய் அவர்களுக்குரிய அஸ்வெசும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் மட்டும் இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்கு 11,825,596,250 ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.

