நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும், அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான மக்கள் இன்று(24 )பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் விண்ண…
நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும், அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான மக்கள் இன்று(24 )பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த பலருக்கு இதுவரை நிதி கிடைக்காமை தொடர்பில் விசாரிப்பதற்காக பிரதேச செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.அஸ்வெசும நிதி இதன் காரணமாக, காலை முதல் நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததுதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிலர், அஸ்வெசும நிதியை பெற்றுக்கொள்வதற்காக தாங்கள் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வருகை தர வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு நேரடியாக வந்து நிலைமைகளை பார்வையிடவுள்ளதாகவும், அந்த ஆய்வின் பின்னரே அஸ்வெசும நிதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
சிலர் தங்களது விண்ணப்பங்கள் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.மக்களின் முறைப்பாடுகள் அஸ்வெசும நிதி என்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவியாகும். எனவே, தகுதியுடையவர்களுக்கு உரிய முறையில் நிதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது பெருமளவான மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பிரதேச செயலகத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அஸ்வெசும நிதி வெளிப்படையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாகும்.












