'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோருக்காக மொத்தம் 3,108,805,000 ரூபாய் அவர்…

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோருக்காக மொத்தம் 3,108,805,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோருக்காக 380,695,000 ரூபாய் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தகுதியுடைய பயனாளர்கள் இன்று முதல் தங்களுக்குரிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.