'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகை பிரீத்தி முகுந்தன், தொடர்ந்து 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா' எனப் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் அவர் நடித்த சமீபத்திய 'பிளாஸ்ட்' தி…

'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகை பிரீத்தி முகுந்தன், தொடர்ந்து 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா' எனப் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் அவர் நடித்த சமீபத்திய 'பிளாஸ்ட்' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இப்படத்தில் அவர் நடித்த சண்டைக் காட்சிகள் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.

இது குறித்து நடிகை பிரீத்தி முகுந்தன் தனது நேர்காணலில் கூறியதாவது:

“'பிளாஸ்ட்' திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு துணிச்சலான, வழக்கத்திற்கு மாறான முடிவாகும். மற்ற நடிகைகள் இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கியிருக்கலாம்; ஆனால், எனக்கு எப்போதும் அதிரடி (Action) கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம். ரசிகர்களின் இந்த அன்பான வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.”

மேலும், தனது அடுத்த படம் குறித்துப் பேசிய அவர், “'பிளாஸ்ட்' படத்திற்கு முன்பே 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அதில் எனது கதாபாத்திரம் மிகவும் இனிமையாக இருக்கும். 'பிளாஸ்ட்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.