(நெவில் அன்தனி) கனடா, மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்படும் 23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அதி சிறந்த 3ஆம் இடத்துக்கான காத்திருப்பு பட்டியலில் ஈரான் இடம்பெற்றுள்ளது. சியெட்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற எகிப்துடனான ஜீ குழு போட்டியை வெற்ற…
(நெவில் அன்தனி) கனடா, மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்படும் 23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அதி சிறந்த 3ஆம் இடத்துக்கான காத்திருப்பு பட்டியலில் ஈரான் இடம்பெற்றுள்ளது.
சியெட்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற எகிப்துடனான ஜீ குழு போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட அமெரிக்காவின் அரசியல் வைரியான ஈரான், அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான காத்திருப்பு பட்டியலில் இணைந்துகொண்டுள்ளது. இக் குழுவில் பெல்ஜியம், நியூஸிலாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளையும் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட ஈரான் 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. அதிசிறந்த 3ஆம் இடத்துக்கான 8 இடங்களுக்குள் ஈரான் இடம் பிடித்தால் அடுத்து சுற்றுக்கு முன்னேறும். அதற்காக கடைசிக் கட்ட முதல் சுற்றுப் போட்டி முடிவுகளை ஈரான் எதிர்பார்த்துள்ளது. இதே குழவில் இடம்பெற்ற பெல்ஜியம் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை 5 - 1 என வெற்றிகொண்டு தோல்வி அடையாத அணியாக 32 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது. ஐ குழுவிலிருந்து பிரான்ஸ், நோர்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஜீ குழு போட்டி முடிவுகள் பிரான்ஸ் 4 - நோர்வே 1, செனகல் 5 - ஈராக் 0 நோர்வேக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது. ஈராக்குடானான போட்டியில் செனகல் 5 - 0 என அமோக வெற்றியீட்டியது.

