உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்கு…
உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், அத்துடன் முக்கிய உணவு உற்பத்தி நாடுகள் தமது உள்நாட்டு நுகர்வை உறுதி செய்வதற்காக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.ஏற்றுமதிக்கு தடை தற்போது இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இதன் காரணமாக பிரேசில் போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவும், இறக்குமதிக்கான கால அவகாசமும் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.
இந்தியாவும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உலகளாவிய நிலைமை
அவ்வாறான நிலை ஏற்பட்டால், நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அதன் காரணமாக அதிகரிக்கும் கடல் போக்குவரத்து கட்டணங்களால் விலைகள் மேலும் உயரக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஏற்கனவே கடல் போக்குவரத்து கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பருப்பு, சர்க்கரை, கோதுமை, சில வகையான அரிசி மற்றும் டின் மீன் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருவதால், இந்த உலகளாவிய நிலைமை இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening












