அவசர நிலக்கரி கொள்வனவு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட ஐந்தாவது நிலக்கரி கப்பல் தரமற்றது என கண்டறிப்பட்டுள்ளது. இந்தியாவின் தரஞ்ஜோத் ரிசோர்சஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐந்தாவது அவசர நிலக்கரித் தொகுதி லங்கா கோல் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (LCC) நி…

அவசர நிலக்கரி கொள்வனவு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட ஐந்தாவது நிலக்கரி கப்பல் தரமற்றது என கண்டறிப்பட்டுள்ளது. இந்தியாவின் தரஞ்ஜோத் ரிசோர்சஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐந்தாவது அவசர நிலக்கரித் தொகுதி லங்கா கோல் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (LCC) நிறுவனத்தினால் புத்தளத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த நிலக்கரித் தொகுதியில் தேவையான (கெலோரிபிக்) சாம்பல் (Gross Calorific Value – GCV) அளவை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக அதன் ஏற்றியிறக்கல் துறைமுக அறிக்கை (load port report) காட்டியுள்ளது. கெலோரிபிக் அளவுஇதன்படி, ஐந்து அவசர நிலக்கரித் தொகுதிகளில் இரண்டு, எல்.சி.சி (LCC) நிறுவனத்தினால் கோரப்பட்ட குறைந்தபட்சத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதாகும். இது கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவை முடக்கியுள்ள தொடர் பின்னடைவுகளின் பட்டியலில் மேலும் ஒன்றாக இணைந்துள்ளது. தரஞ்ஜோத் நிறுவனத்தின் முதலாவது நிலக்கரித் தொகுதிக்கான ஏற்றல் துறைமுக அறிக்கை (load port report), அதில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக சாம்பல் உள்ளடக்கம் இருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது. எவ்வாறாயினும், அதன் ஜி.வி.சி (GCV) அளவுகள் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததால் இலங்கை நிலக்கரி நிறுவனம் அந்தத் தொகுதியை ஏற்றுக்கொண்டதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஐந்தாவது நிலக்கரித் தொகுதி அவ்வாறு அமையவில்லை.நிலக்கரியை இறக்குவதற்கு கடற்பரப்பு விரைவில் மிகவும் கொந்தளிப்பாக மாறும் என்பதால், நிலக்கரியை இறக்குவது கடினமாகிவிடும் எனக் குறிப்பிட்ட எரிசக்தி அமைச்சின் பதில் செயலாளர் நிராகரிக்கப்பட்ட ஐந்தாவது நிலக்கரித் தொகுதிக்கு பதிலாக புதிய தொகுதியை செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்குமாறு தரஞ்ஜோத் நிறுவனத்திற்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.[R3IIVFS.]