நாட்டில் அமுலில் இருந்த பொது அவசரகால நிலை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ…
நாட்டில் அமுலில் இருந்த பொது அவசரகால நிலை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் மற்றும் அவசர நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாடு முழுவதும் பொது அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டது. பின்னர் நிலைமையை கருத்தில் கொண்டு அந்த அவசரகால நிலை பல தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

