அவுஸ்திரேலியாவில் 'எச்5என்1' (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப் பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக 50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள…

அவுஸ்திரேலியாவில் 'எச்5என்1' (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப் பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக 50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடிலெய்ட் பகுதிக்கு தெற்கே உள்ள கேப் ஜாஃபா பாறைப் பகுதிகளில் 49 இறந்த பறவைகளும், 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் கண்டறியப்பட்டன.அபாயம் அவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எச்5என்1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுவரை பண்ணைப் பறவைகளிடம் இந்த வைரஸ் பரவவில்லை என்றும், ஜூன் மாதம் முதல் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் பறவைகளும் பாலூட்டிகளும் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இதுவரை இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தது.

எச்5என்1 வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்றாலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.