எல்ல வனப்பகுதியில் தீ விபத்து! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல பகுதியில் அமைந்துள்ள மஹாமேவ்னாவா பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றில் நேற்று (04) சனிக்கிழமை…
எல்ல வனப்பகுதியில் தீ விபத்து!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல பகுதியில் அமைந்துள்ள மஹாமேவ்னாவா பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றில் நேற்று (04) சனிக்கிழமை இரவு திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர், பொலிஸார், முப்படைகளின் வீரர்கள், வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்தத் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
விகாரைக்கோ அல்லது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கோ எந்தவிதமான சொத்துச் சேதங்களும் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

