ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாத…
ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கொழும்பு - 07 ஏசி அறையில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கிராமங்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்.
மக்கள் சந்திப்பு மேடைகளில் ஏறி வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் என கூற வேண்டும்.
கடந்த காலத்திலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவர் தேர்தலின் போது ஒரு ஆடையை அணிந்தார், வென்ற பிறகு அதை கழற்றிப்போட்டார்.
சிலர் வெல்லும்போது ஒரு ஆடை, தோற்கும்போது வேறு ஒரு ஆடை. நாங்கள் நேர்மையாக சரியானதை செய்தோம்.இது எங்கள் அடையாளம் அதனால், எதிர்காலத்திலும் எங்களுடைய ஆடையை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல.
அதுதான் எங்கள் அடையாளம், நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கிறோம். அதேபோல், இந்த நாட்டு மக்கள் அந்த பொய்ப் பரப்புரைகள், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இன்று நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றன. ஆனால் அது இனிமேலும் பலிக்காது என்று நாங்கள் நினைக்கிறோம்.
அதனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஆடைகளை மாற்றுபவர்கள் அல்ல. சில தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் அணிந்த ஆடையை, அதிகாரத்திற்கு வந்த பின் அணிவதில்லை. அதனால்தான் சொல்கிற ஒன்றை செய்வதில்லை. வரம்பற்ற பொய்களைச் சொல்லி அதிகாரத்திற்கு வந்து, மீண்டும் பொய்களையே சொல்கிறார்கள் என தெரிவித்தார்.

