இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை,…

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.கொலை குற்றச்சாட்டுகள்

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.