நட்ஸ் என்பது, கொழுப்பு அதிகமுள்ள விதை வகைகள். கொழுப்பு மட்டுமல்ல, மிகச்சிறந்த ஊட்டச்சத்து பெட்டகமாகவும் அவை இருக்கும். எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இவற்றை ஒருநாளில் எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்பதை போலவே அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக…
நட்ஸ் என்பது, கொழுப்பு அதிகமுள்ள விதை வகைகள். கொழுப்பு மட்டுமல்ல, மிகச்சிறந்த ஊட்டச்சத்து பெட்டகமாகவும் அவை இருக்கும். எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இவற்றை ஒருநாளில் எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்பதை போலவே அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்ஏனெனில் சரியான நேரத்தில் சாப்பிட்டால்தான் அதன் நன்மைகள் அதிகமாக இருக்குமாம். குறிப்பாக நேரத்தை பொறுத்துதான் அது உட்கிரகிக்கப்படும் விகிதம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஒரு நட்ஸில் இருந்து ‘முழு ஊட்டச்சத்துக்களையும் பெற எந்த நட்ஸ் வகையை எப்போது சாப்பிடலாம்’ என்பதைப்பற்றி நாம் இங்கு பார்ப்போம்.பாதாம்எடை குறைக்கவோ, சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரவோ பாதாம் சாப்பிடுபவர்கள், அதை சாப்பிட சிறந்த நேரம் மாலை வேளைதான். பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன, அவை ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மூளை செயல்பாட்டை ஆதரிக்கின்றன. 100 கிராம் பாதாமிற்கு 22 கிராம் புரதம், 50 கிராம் கொழுப்பு, 20 – 22 கிராம் கார்ப்ஸ், 10 - 12 கிராம் நார்ச்சத்து, 200 – 300 மி.கி. கால்சியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின் இ போன்ற சத்துக்கள் உள்ளன. இவற்றை 20 கிராம் வரை ஊறவைத்து மாலையில் பஜ்ஜி, வடைக்கு பதிலாக சாப்பிடுவது நல்லது. நல்ல பலன்களையும் இது கொடுக்கும்.வால்நட்ஸ் வால்நட்ஸில் (100 கிராமிற்கு) 14 கிராம் கார்ப்ஸ், 65 கிராம் நல்ல கொழுப்பு, புரதம் 15 கிராம், நார்ச்சத்து 7 கிராம் இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது. இதனை 20 – 30 கிராம் வரை மாலையில் சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும்.முந்திரிமுந்திரி இதில் 100 கிராமிற்கு 30 கிராம் கார்ப்ஸ், 18 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 6 மி.கி. இரும்புச்சத்து உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. இவை நன்கு உட்கிரகிக்கப்பட, மதிய நேரத்தில் இவற்றை சாப்பிடுவது நல்லது.வேர்க்கடலை வேர்க்கடலை இருக்கும் எல்லா நட்ஸையும் விடவும் அதிக சத்து நிறைந்தவை வேர்க்கடலைதான். 1 கிலோ வேர்க்கடலையில், 25 கிராம் புரதம், 15 கிராம் கார்ப்ஸ், 49 கிராம் கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன. இதை எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இருப்பினும் அளவோடு சாப்பிட வேண்டும். குறிப்பாக எடை குறைக்க நினைப்பவர்கள், அளவில் கவனமாக இருக்க வேண்டும்.பிஸ்தா100 கிராம் அளவிலான பிஸ்தாவில் 1,000 கிராம் அளவிற்கு பொட்டாசியம் இருக்கிறது. அதேபோல 20 கிராம் புரதம், 30 கிராம் கார்ப்ஸ் இருக்கின்றன. அதிக உடலுழைப்பு உள்ளவர்கள், உதாரணமாக உடற்பயிற்சி செய்வோர், விளையாட்டு வீரர்கள் இவற்றை ஆற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை மதிய நேரத்தில் சாப்பிடலாம்.

